விறுவிறுப்பான ராபரி திரில்லராக உருவாகியுள்ள லாக்கர்


விறுவிறுப்பான ராபரி திரில்லராக உருவாகியுள்ள லாக்கர்
x

இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாக்கர்’. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இரட்டை இயக்குனர்கள் ராஜசேகர் என்- யுவராஜ் கண்ணன் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம் 'லாக்கர்'. இப்படத்தில் எதற்கும் துணிந்தவன், கேம் ஓவர், மாஸ்டர் படங்களில் நடித்த விக்னேஷ் சண்முகம் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார்.

மேலும், வில்லனாக தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்த நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். பிரின்ஸ், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார். தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'லாக்கர்' படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் விஷ்ணு இடவன் எழுதியுள்ளனர். ராபரி டிராமாவாக உருவாகியுள்ள 'லாக்கர்' படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இறுதி கட்டப் பணியில் இருக்கும் 'லாக்கர்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story