இளையராஜா இசையில் பன்மொழி திரைப்படமாக உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'
ஸ்ரேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மியூசிக் ஸ்கூல்’. இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பப்பா ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மியூசிக் ஸ்கூல்'. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், அறிமுக நடிகர்களான ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து, இப்படத்தின் முதல் பாடலான 'மம்மி சொல்லும் வார்த்தை' பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story