மிஷ்கின் இசையில் முதல் பாடல்.. வைரலாக்கும் ரசிகர்கள்
ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் 'டெவில்' படத்தில் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.
மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொள்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் மிஷ்கின் இசையமைத்துள்ள "டெவில்" படத்தின் முதல் பாடலான "கலவி" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Related Tags :
Next Story