நான்காவது முறையாக அல்லு அர்ஜுனுடன் இணைந்த பிரபல இயக்குனர்


நான்காவது முறையாக அல்லு அர்ஜுனுடன் இணைந்த பிரபல இயக்குனர்
x

'ஜூலாய்', 'S/O சத்தியமூர்த்தி' மற்றும் 'அலா வைகுண்டபுரமுலு' படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் அல்லு அர்ஜுன் இணைந்துள்ளார். இது தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் 'ஜூலாய்', 'S/O சத்தியமூர்த்தி' மற்றும் 'அலா வைகுண்டபுரமுலு' படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் இணைந்துள்ளார். இதனை குரு பூர்ணிமாவை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் இதுவரை பார்த்திராத காட்சியைக் (Never before seen Visual Spectacle) கொண்டு வர இந்தக் கூட்டணி முடிவு செய்துள்ளது. இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் பேனர், ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் உடன் தயாரிக்கிறது.

இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் பிற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Next Story