குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக ரிஷப் ஷெட்டி பெயரில் அறக்கட்டளை


குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக ரிஷப் ஷெட்டி பெயரில் அறக்கட்டளை
x

“காந்தாரா” திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரிஷப் ஷெட்டி. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குனருமாக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் சமீபத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ரிஷப் ஷெட்டியை இந்தியா முழுவதும் அறியவைத்தது.

இவர் தற்போது "காந்தாரா" படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், ரிஷப் ஷெட்டி தனது 40வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கடந்த 7ஆம் தேதி கொண்டாடினார். அந்த விழாவில் "காந்தாரா" திரைப்படத்தில் இடம்பெற்ற 'பூத கோலா' நடனத்தை மேடையில் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதன்பின்னர் அவரது மனைவி பிரகதி, ரிஷப் ஷெட்டி பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்தார். இந்த அறக்கட்டளை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அறிவித்தார்.

ரிஷப் ஷெட்டியை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story