நிஜ காந்தாராவை சந்தித்து ஆசி பெற்ற ரிஷப் ஷெட்டி.. அவரே பகிர்ந்த வீடியோ


நிஜ காந்தாராவை சந்தித்து ஆசி பெற்ற ரிஷப் ஷெட்டி.. அவரே பகிர்ந்த வீடியோ
x

இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும்பவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கத்தில் காந்தாரா -2 விரைவில் உருவாகவுள்ளது.

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.

கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இயக்குனர் ரிஷப் ஷெட்டி நிஜ காந்தாராவான பஞ்சுருளி தெய்வத்தை நேரில் சென்று வணங்கி ஆசி பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


Next Story