ஆர்யா-கவுதம் கார்த்திக் கூட்டணியில் இணைந்த சரத்குமார்
நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் மிஸ்டர்.எக்ஸ். இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தை இயக்குகிறார்.
பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தில் சரத்குமார் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சரத்குமார் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story