இசையில் மிரட்டிய சித்தார்த் விபின்.. ஐபோன் வழங்கி அசத்திய 'ஒன் 2 ஒன்' இயக்குனர்


இசையில் மிரட்டிய சித்தார்த் விபின்.. ஐபோன் வழங்கி அசத்திய ஒன் 2 ஒன் இயக்குனர்
x

கே.திருஞானம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ’ஒன் 2 ஒன்’. இப்படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார்.

திரிஷா நடிப்பில் வெளியான 'பரமபதம் விளையாட்டு' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.திருஞானம். இவர் இயக்கும் இரண்டாவது படம் 'ஒன் 2 ஒன்'. விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன், நடிகை நீது சந்த்ரா, ராகினி திவேதி, பேபி மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

24 ஹெச்.ஆர்.எஸ் (24 HRS) புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். இவர் அசத்தலான ஒரு தீம் இசையையும் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் இசையால் ஈர்க்கப்பட்ட இயக்குனர் கே.திருஞானம் அவருக்கு ஒரு புதிய ஐ போன் (IPhone) ஒன்றை பரிசளித்துள்ளார். 'ஒன் 2 ஒன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story