சித்தார்த் நடிக்கும் 'சித்தா'.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்
இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படம் ‘சித்தா’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது 'சித்தா' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கிறார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைக்கிறார்.
ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து சித்தார்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
Related Tags :
Next Story