அசோக் செல்வன் படத்தின் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்
நடிகர் அசோக் செல்வன் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது 'சபாநாயகன்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' திருப்புமுனை படமாக அமைந்து. சமீபத்தில் இவர் நடித்த 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைத்தொடர்ந்து இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் 'சபாநாயகன்'. மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் கார்த்திகா, சாந்தினி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், 'சபாநாயகன்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். காதல், காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.