மாவீரன் பட வெற்றி.. சுவாரசியத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்


மாவீரன் பட வெற்றி.. சுவாரசியத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்
x

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மாவீரன்'. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

'மாவீரன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், "மடோன் அஸ்வின் விருப்பப்பட்டால் நான் அவருடன் மீண்டும் இணைய தயாராகவுள்ளேன். மாவீரன் வெற்றி எனக்கு கூடுதல் பரிசாக உள்ளது. இப்பொழுது வரை அனைவரும் என்னுடைய படங்களை பாராட்டுவார்கள், ஆனால் முதல் முறை என்னுடைய நடிப்பை பாராட்டியுள்ளனர்" என்றார்.


Next Story