விஜய்க்கு மீண்டும் வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா


விஜய்க்கு மீண்டும் வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா
x

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தில் வில்லனாகவும், வாரிசு படத்தில் கவுரவ தோற்றத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வித்தியாசமான வில்லத்தனம் காட்டி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதற்குமுன்பு எஸ்.ஜே.சூர்யா, விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story