ராம் சரண் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்
ராம் சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் தட்டி சென்றது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராம் சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் தனது மனைவி உபாசனா கர்பமாக இருப்பதாக ராம் சரண் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது. ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த தம்பதிக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story