டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்த சுதா கொங்கரா
இயக்குனர் சுதா கொங்கரா ‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இதையும் சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார். அதேபோல் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. டைட்டில் வெளியாகும் முன்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.