அரண்மனை -4 படப்பிடிப்பை தொடங்கிய சுந்தர் சி.. புகைப்படம் பகிர்ந்த ராஷி கண்ணா


அரண்மனை -4 படப்பிடிப்பை தொடங்கிய சுந்தர் சி.. புகைப்படம் பகிர்ந்த ராஷி கண்ணா
x

இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பை சுந்தர். சி தொடங்கியுள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி அரண்மனை -4 திரைப்படத்துக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மூன்றாம் பாகத்தில் நடித்திருந்த ராஷி கண்ணா, இந்த பாகத்திலும் இணைந்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புடப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அரண்மை -4 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக இணைந்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து தற்போது தமன்னாவும் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story