முழுவீச்சில் நடைபெறும் விஷால் படத்தின் டப்பிங் பணிகள்
விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற விநாயக சதூர்த்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' படத்தின் டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்து, விஷால் டப்பிங் பணிகளில் ஈடுப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.