போர் தொழில் திரைப்பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு


போர் தொழில் திரைப்பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
x

இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘போர் தொழில்’. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'போர் தொழில்'. இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களை குவித்தது.

இந்நிலையில், 'போர் தொழில்' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை நடிகர் சரத்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "வலுவான புலனாய்வு திரைக்கதை கொண்ட போர்த்தொழில் திரைப்படத்தில் பயணித்த அனுபவமும், ரசிகர்களின் வரவேற்பும், பாராட்டும் மனதிற்கு மிகுந்த உற்சாகமளிக்கிறது. அசோக் செல்வனை முதல்முறை சந்தித்த போது, "Love at First Sight" என்று சொல்வது போல, உண்டான உணர்வு விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்தது.

கமலா திரையரங்கில் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடிய தருணத்தில், எங்களுக்கு முன்பாக இருந்த பார்வையாளர்களின் முகங்களில் எழுந்த உற்சாகம், அன்பைகாணும் போது வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது. இத்திரைப்படத்தை சிறப்பாக உருவாக்கி அர்ப்பணித்த அத்தனை நல்உள்ளங்களுக்கும் நன்றி, நன்றி!!!" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story