'பாவனா 86' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் படக்குழு


பாவனா 86 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் படக்குழு
x

வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பாவனா. இவரின் 86 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பாவனா பிசியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் நவீன் ராஜன் தயாரிக்கிறார். இப்படத்தின் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story