தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் 'பொன்னியின் செல்வன்' டிரைலர்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’. இப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த 29-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் டிரைலரை வெளியிட்டார். இந்த டிரைலர் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், டிரைலர் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' டிரைலர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.