புதிய போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த 'தீராக்காதல்'
ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் ‘தீராக்காதல்’. இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.
இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் 'தீராக் காதல்'.இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'தீராக்காதல்' படக்குழு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் படம் விரைவில் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story