சினிமாவில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதான்- மீரா ஜாஸ்மின்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் தற்போது ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இவர் தற்போது தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ள 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், எந்த தனிப்பட்ட காரணங்களுக்காக சில காலம் நடிக்கவில்லை என்று மீரா ஜாஸ்மின் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, மாதவனுடன் 'ரன்', 'ஆய்த எழுத்து' படங்களில் நடித்திருக்கிறேன். சித்தார்த்தும் 'ஆய்த எழுத்து' படத்தில் நடித்திருந்தார். அவர்களுடன் 'டெஸ்ட்' படத்தில் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.
நயன்தாராவுடனும் இந்தப் படத்தில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது. இடையில் சில காலம் என் தனிப்பட்ட காரணங்களுக்காக நடிக்கவில்லை. இப்போது மீண்டும் நடிப்பைத் தொடங்கி இருக்கிறேன். எனது சமூகவலைதளப் படங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து நேர்மறையான கருத்துகள் வருகின்றன. என்னைப் பின்தொடர்பவர்களுக்கு இதையெல்லாம் பகிர்வதற்கு சமூக வலைதளம் உதவுகிறது என்று பேசினார்.