அஜித்துடன் இணையும் இரண்டு கதாநாயகிகள்.. யார் தெரியுமா?
அஜித் தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், 'விடாமுயற்சி' திரைப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் திரிஷா மற்றும் தமன்னா இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, புனே, அபுதாபி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story