டுவிட்டரில் திடீரென டிரெண்டாகும் விஜய்.. காரணம் இதுதான்!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரின் ரசிகர்கள் தற்போது விஜய் குறித்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய். அதன்பின்னர் ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், காதலுக்கு மரியாதை, குஷி, ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் தளபதிவிஜய் என்ற ஹாஷ்டாக்குடன் பகிர்ந்து வருகின்றனர். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Related Tags :
Next Story