சுட்டிக்குழந்தையின் மழலை பேச்சை ரசித்த விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ


சுட்டிக்குழந்தையின் மழலை பேச்சை ரசித்த விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ
x

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் மழலைக்குழந்தையுடன் உரையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி, சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் சேதுபதி, தற்போது மழலைக்குழந்தையுடன் உரையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உங்களை பார்க்கணும்னு தோணுச்சு அப்படியே வந்துட்டேன் என்று அந்த மழலை பேசுவதை விஜய் சேதுபதி ரசித்து அவருக்கு சாக்லேட்டை கொடுத்து அவரிடமிருந்து முத்தத்தை பெற்றுக் கொண்டு அனுப்பிவைத்தார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Next Story