மீண்டும் தெலுங்கில் களமிறங்கும் விஜய் சேதுபதி


மீண்டும் தெலுங்கில் களமிறங்கும் விஜய் சேதுபதி
x

நடிகர் விஜய் சேதுபதி பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதி மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 'உப்பென்னா' படத்தின் இயக்குனர் புச்சி பாபு சனா அடுத்ததாக ராம் சரணின் 16-வது படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே 'உப்பென்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story