'லோக்கல் சரக்கு' டீசர் வெளியிட்ட விஜய் சேதுபதி


லோக்கல் சரக்கு டீசர் வெளியிட்ட விஜய் சேதுபதி
x

இயக்குனர் ராஜ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லோக்கல் சரக்கு’. இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் யோகிபாபு, நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லோக்கல் சரக்கு'. டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் இயகியுள்ளார். மேலும், இப்படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் 'லோக்கல் சரக்கு' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். குடியால் சாதாரண மனிதரின் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை விளக்குவது போன்று உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Next Story