அந்த சவுண்ட கேட்டா உங்களுக்கு கோபம் வருமாமே.. ஜிவி பிரகாஷை வம்பிழுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்


அந்த சவுண்ட கேட்டா உங்களுக்கு கோபம் வருமாமே.. ஜிவி பிரகாஷை வம்பிழுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
x

டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பேச்சுலர், ஜெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்றவர் ஜிவி பிரகாஷ் குமார். ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சமூக வலைத்தளத்தில் ஜிவி பிரகாஷை வம்பிழுத்துள்ளார்.

வெயில் படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் குமார். அதன்பின்னர் கிரீடம், குசேலன், ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், ஆடுகளம், தெறி, அசூரன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாது கதாநாயகனாக டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பேச்சுலர், ஜெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவர் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஜிவி பிரகாஷ் ராஜ் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்ஹ்டுள்ளது. அதில், அன்பான ஜிவி பிரகாஷ், நீங்க எவ்வளோ பெரிய மியூசிக் டைரக்டர்.. அந்த சவுண்ட கேட்டா உங்களுக்கு கோபம் வருமாமே என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதற்கு ஜிவி பிரகாஷ் பதிலளித்துள்ளார். அதில், டியர் ஐஷு, அந்த சவுண்டு மியூசிக் இல்லமா நாய்ஸ் !! என்று பதிவிட்டு மேலும் ரசிகர்களை குழப்பியுள்ளார்.


Next Story