வாகனமும் தமிழ் திரைப்படமும்... சிறகு விரிக்கும் படையப்பா கார்
படையப்பா திரைப்படம் வந்து 20 வருடங்கள் ஆகிறது, என்றாலும் இன்னும் ரசிகர்கள் கொண்டாடும் ‘சூப்பர் ஹிட்’ திரைப்படமாகவே இருக்கிறது.
படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் வந்திறங்கும் கார் டொயாட்டோ செரா என்பதாகும். ‘நீலாம்பரி விமானத்தில் வராங்க, கார் கப்பலில் வருது’ என்று படத்தில் வசனம் இடம்பெற்றிருக்கும்.
கதாபாத்திரத்திற்கு ஏற்ப பிரமாண்டமான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கார் பயன்படுத்தப்பட்டது. இது இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் சொந்த காராகும்.
இந்த காட்சியில் அந்த காரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று ரஜினிகாந்த் பரிந்துரை செய்தாராம். அப்போது ஆறு லட்சத்திற்கு அந்த காரை வாங்கினார் ரவிக்குமார். வழுவழுப்பான மேல்புற பகுதி மற்றும் பட்டாம் பூச்சியின் சிறகுகளை போல விரியும் கதவுகள் ஆகியவை இந்த காரின் சிறப்பம்சங்கள்.
Related Tags :
Next Story