பொருத்தமாக இருப்பார் என்று “கதாநாயகிகளுக்கு சிபாரிசு செய்வது உண்டா?” நடிகர் ஜெயம் ரவி பேட்டி


பொருத்தமாக இருப்பார் என்று “கதாநாயகிகளுக்கு சிபாரிசு செய்வது உண்டா?” நடிகர் ஜெயம் ரவி பேட்டி
x
தினத்தந்தி 2 Jan 2021 4:00 AM IST (Updated: 2 Jan 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

ஜெயம் ரவி நடித்து பொங்கல் விருந்தாக ‘பூமி’ படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருக்கிறார்.

‘ரோமியோ ஜுலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமன் டைரக்டு செய்து இருக்கிறார். பூமி படத்தை பற்றி ஜெயம் ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜெயம் ரவி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பூமி படம் எதைப்பற்றி பேசும்? இந்த படத்தின் கதை என்ன?

பதில்:- ‘பூமி,’ விவசாயிகள் பிரச்சினையை பற்றி பேசும். சில பாரம்பரியமான நல்ல விசயங்களை நாம் எங்கோ தூக்கிப்போட்டு விட்டோம். அவைகளை மறந்து விட்டோம். உதாரணத்துக்கு கொரோனாவின் தாக்குதல்களுக்கு பின்னர்தான் அதை தடுக்கும் மருந்து ஆயுர்வேதத்தில் இருப்பது தெரியவந்தது. அதுபோல்தான் இயற்கை விவசாயமும். இந்த படத்தின் கதை பூமியை பற்றியும், பூமிநாதன் என்கிற கதாநாயகனை பற்றியும் பேசும்.

கேள்வி:- படம் தியேட்டர்களில் திரையிடப்படுமா, ‘ஓ.டி.டி.’ யில் திரையிடப்படுமா?

பதில்:- ‘ஓ.டி.டி.’யில் ரிலீஸ் ஆகும். படம் முடிவடைந்து 11 மாதங்கள் ஆகிவிட்டது. கொரோனா பிரச்சினை காரணமாக காத்திருந்து படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

கேள்வி:- இந்த படத்தின் கதையை கேட்டபோது, முக்கியமாக கவர்ந்த விசயம் எது?

பதில்:- பூமி படத்தின் மிக சிறந்த அம்சம், திரைக்கதை. அனைத்து தரப்பினரும் ரசிக்கிற மாதிரி கதை சொல்லப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். மிக நேர்மையாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் லட்சுமன்.

கேள்வி:- உங்களுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகள் பற்றி ‘ ‘இவர் பொருத்தமாக இருப்பார்” என்று யாருக்காவது சிபாரிசு செய்வது உண்டா?

பதில்:- அந்த சைடில் நான் போவது இல்லை. கதையை தேர்வு செய்வதில் நான் கவனம் செலுத்துகிறேன். அது அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது.

கேள்வி:- உங்கள் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில், அடுத்து எப்போது நடிக்கப் போகிறீர்கள்?

பதில்:- இந்த வருடம் இறுதியில் நடிப்பேன்.

இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.


Next Story