அழகாக இல்லை என்ற அவமதிப்பை சந்தித்த சாக்‌ஷி அகர்வால்


அழகாக இல்லை என்ற அவமதிப்பை சந்தித்த சாக்‌ஷி அகர்வால்
x
தினத்தந்தி 10 May 2021 4:00 AM IST (Updated: 10 May 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் ராஜா ராணி, யோகன், காலா, விஸ்வாசம், டெடி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாக்‌ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.

சாக்‌ஷி அகர்வால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’நான் பள்ளியில் படித்தபோது சில பெண்கள் நீ குண்டாகவும் அசிங்கமாகவும் இருக்கிறாய் என்றனர். எந்த பையனும் உன்னை விரும்ப மாட்டான். மற்ற பெண்களும் உன்னுடன் நட்பாக பழக விரும்ப மாட்டார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் இப்போது தினமும் என்னை பிடிப்பதாக சொல்லி ஏகப்பட்ட கடிதங்கள் வருகிறது. ஒருவருக்கு மன அழகுதான் முக்கியம். அது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எனவே யாரையும் இழிவுப்படுத்த வேண்டாம். பள்ளி, கல்லூரி, பணியிடங்கள் எதுவாக இருந்தாலும் யாரையும் குறைவாக மதிப்பிட்டு பேச வேண்டாம். ஒவ்வொரு தனிமனிதனும் இந்த பிரபஞ்சத்தில் அவரவர் சொந்த வழியில் அழகானவர்களாகத்தான் இருக்கிறார்கள். என்னை நிபந்தனையில்லாமல் நேசிப்பவர்களுக்கும் எனக்காக இருப்பதற்காகவும் நன்றி. நீங்கள்தான் எனது பெரிய பலம். எப்போதும் நேர்மறையாக இருங்கள். கடினமாக உழையுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதை நீங்களே செய்யுங்கள். உங்கள் வலியை சக்தியாக மாற்றவும்’’ என்று கூறியுள்ளார்.

Next Story