‘‘நடிகைகளுக்கு கோவில் கட்டுவதில் உடன்பாடு இல்லை’’ நடிகை வாணிபோஜன் பேட்டி


‘‘நடிகைகளுக்கு கோவில் கட்டுவதில் உடன்பாடு இல்லை’’ நடிகை வாணிபோஜன் பேட்டி
x
தினத்தந்தி 16 July 2021 12:07 AM GMT (Updated: 2021-07-16T05:37:28+05:30)

வாணிபோஜன் தினமும் உடற்பயிற்சி செய்வதில் ஈடுபாடு கொண்டவர்.

சென்னையில் ஒரு உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு வாணிபோஜன் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: ஓடிடியில் படங்கள் வெளியிடுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: எங்களைப் போன்று புதிதாக வரும் நடிகர்-நடிகைகளுக்கு ஓடிடி தளம் சாதகமாக இருக்கிறது. தியேட்டர்களுக்கு மாற்றாக ஓடிடி அமைந்திருக்கிறது. ஆனாலும் தியேட்டர்களுக்குப் போய் படம் பார்ப்பது, ஒரு தனி அனுபவம்.

கேள்வி: வெப் தொடர்கள் தயாரிக்கப்படுவது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். எங்களுக்கு மகிழ்ச்சிதான். நிறைய புதுமுகங்கள் வருவதற்கு வெப் தொடர்கள் வாய்ப்பு அளிக்கின்றன.

கேள்வி: நடிகைகளுக்கு கோவில் கட்டுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அதில் எனக்கு உடன்பாடு இல்லை. தெய்வங்களுக்குத்தான் கோவில் கட்ட வேண்டும். நாங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கிறோம். எங்களுக்கு கோவில் கட்ட தேவையில்லை. இவ்வாறு வாணிபோஜன் கூறினார்.

Next Story