சாம்ராஜ்நகரில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்-நரேந்திரா எம்.எல்.ஏ பேட்டி


சாம்ராஜ்நகரில்  மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்-நரேந்திரா எம்.எல்.ஏ பேட்டி
x
தினத்தந்தி 9 Sept 2022 11:11 PM IST (Updated: 14 Sept 2022 11:52 AM IST)
t-max-icont-min-icon

சாம்ராஜ்நகரில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று நரேந்திரா எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

கொள்ளேகால்:

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதனால் கனூர், லோகனஹள்ளி ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளை பயிர்கள் நாசமானது. மேம்பாலங்கள், சாலைகள் நீரில் அடித்து செல்லப்பட்டது. இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மழை பாதித்த இடங்களை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான நரேந்திரா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- லோகனஹள்ளியில் 3 முதல் 4 கோடி வரை தோட்டப்பயிர்கள் நாசமாகியுள்ளது.

சாலையோர தடுப்பு சுவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இடங்களில் உடனே சீரமைப்பு பணிகளை செய்யவேண்டும். சோலார் மின் வேலி அமைத்து யானைகளை தடுப்பதற்கு நிரந்தரமான தீர்வு காணப்படவில்லை. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. தடுப்பணைகளின் தடுப்பு சுவர்கள், மேம்பாலங்கள் தரமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யவேண்டும். இதுவரை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்காமல் உள்ளது. இதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story