மெரினாவில் சிவாஜி சிலையை மீண்டும் வைப்பார்கள் என நம்புகிறோம் - நடிகர் பிரபு


மெரினாவில் சிவாஜி சிலையை மீண்டும் வைப்பார்கள் என நம்புகிறோம் - நடிகர் பிரபு
x
தினத்தந்தி 1 Oct 2019 3:44 PM IST (Updated: 1 Oct 2019 3:44 PM IST)
t-max-icont-min-icon

மெரினாவில் சிவாஜி சிலையை மீண்டும் வைப்பார்கள் என நம்புகிறோம் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.

சென்னை,

நடிகர்  சிவாஜி கணேசனின் 92-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக அரசின் சார்பில் சிவாஜி கணேசன் சிலைக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல நடிகர் பிரபும் தனது தந்தையும், நடிகருமான சிவாஜி கணேசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, 

அரசு தரப்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தியதில் பெருமையாகவும், சந்தோசமாகவும் இருக்கிறது. கடற்கரையில் சிவாஜி சிலையை மீண்டும் வைக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்திருக்கிறோம். வைப்பார்கள் என்று நம்புகிறோம் என கூறினார்.

முன்னதாக போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை மெரினா காமராஜர் சாலையில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை தமிழக அரசு அகற்றியது. அகற்றப்பட்ட சிலை சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story