நாளை தாக்கலாகிறது பட்ஜெட் : வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என எதிர்பார்ப்பு


நாளை தாக்கலாகிறது பட்ஜெட் : வருமான வரி  விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 31 Jan 2018 7:20 PM IST (Updated: 31 Jan 2018 7:20 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என்பது மாதச்சம்பளம் பெறுபவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. #Budget2018


புதுடெல்லி,

ஜி.எஸ்.டி வரி அமலாக்கம், விரைவில் தேர்தல் ஆகியவற்றுக்கு இடையே, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு நாளை தனது கடைசி முழு நேர பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த பட்ஜெட்டில், விலைவாசி உயர்வு பிரச்சினை, மாத ஊதியம் பெறும், நடுத்தர வர்க்கத்தினருக்கு  வருமான வரிவிலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா? என எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

2018-19-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்கிறார்.  மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தாக்கல் செய்யும் கடைசி முழு நேர பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும் முடியும். தேர்தல், நெருங்கி  வரவுள்ளதால், இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் வருமா? என எதிர்பார்க்கப்படுகிறது. 

நடுத்தர வர்கத்தினர், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், பட்டியலிடப்பட்ட பிரிவினர், ஏழை மக்கள் ஆகியோரின் வாக்குகளை கவரும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008-09ம் ஆண்டில் வருமானவரி விலக்கு ரூ.1.5 லட்சத்தில் இருந்த நிலையில், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இப்போது ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் மாத ஊதியம் பெறும் நடுத்தர வர்க்தத்தினர் ஊதிய வருமானவிலக்கு உயர்த்தப்படுமா, சேமிப்புகளுக்கான விலக்கு அளிக்கப்படுமா உள்ளிட்ட எதிர்பார்ப்புகளை வைத்து காத்திருக்கின்றனர். 

அதேபோல், முதலீட்டாளர்கள் நம்பிக்கையை தக்க வைக்க, நிதிப்பற்றாக்குறை விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துவதும் அவசியமாகும். முதலீட்டாளர்கள் மற்றும் சாதாரண மக்கள் என அனைவரையும் கவரும் வகையில் பட்ஜெட் இருக்கும் என்றும் பரவலாக கூறப்படுகிறது. கார்பரேட் வரியை 30 சதவீதத்தில் இருந்து  25 சதவீதமாக சதவீதம் குறைக்க வேண்டிய அவசியமும் மத்திய அரசுக்கு உள்ளது. கார்பரேட் வரியை குறைத்தால் மட்டுமே சர்வதேச சந்தையில் இந்திய நிறுவனங்கள் போட்டியிட முடியும்.   #Budget2018 


Next Story