பட்ஜெட் 2018: ‘விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்’ விவசாயிகள் சலுகைகள் எதிர்பார்ப்பு


பட்ஜெட் 2018: ‘விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்’ விவசாயிகள் சலுகைகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 31 Jan 2018 7:39 PM IST (Updated: 31 Jan 2018 7:41 PM IST)
t-max-icont-min-icon

மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி நாளை பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். #Budget2018 #Farmerloan


புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மத்திய அரசின் பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டு, நிதி பற்றாக்குறையும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பும் அதிகரித்து இருக்கிறது.

வருகிற 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் வேளாண்மை சந்தைகள் ஆன்லைன் மூலம் இணைக்கப்படுகின்றன.

நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்கு கல்வி முக்கிய அடித்தளமாக அமைகிறது. எனவே பள்ளிக்கல்வியையும், உயர்கல்வியையும் வலுப்படுத்தி நவீனப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டு இருக்கிறது என்றார். மத்திய அரசின் பொது பட்ஜெட் மீது அனைத்து தரப்பு மீதும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. விவசாயம் முக்கிய இடத்தை பெறும் என்ற எதிர்பார்ப்பும் விசாயிகள் மத்தியில் இருந்து வருகிறது.

விதைப்பொருட்கள், விவசாய உள்ளீடுகள், விளைப்பொட்களுக்கு சரியான விலை என்ற கோரிக்கையானது விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையானது பலரது தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி பட்ஜெட்டிற்கு முன்னதாக தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசுகையில், ரூபாய் நோட்டு வாபஸ், ஜி.எஸ்.டி அமல் ஆகியவை அரசின் வெற்றிக்கு உதாரணங்கள். நாட்டில் வேலையின்மை நிலவுவதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. நாட்டில் விவசாயிகளுக்கு பிரச்னைகள் இருப்பது உண்மைதான். மாநில அரசுகளுடன் இணைந்து அதனைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற கூறியிருந்தார். 

விவசாய கடன் தள்ளுபடி

பாரதீய ஜனதா சட்டமன்றத் தேர்தல்களை எதிர்க்கொண்ட போது விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. உத்தரபிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் விசாயிகள் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தாலும், விவசாயிகள் போராட்டம் வெற்றிப்பெற்றதாக அமையவில்லை. தமிழக விவசாயிகளும் டெல்லியில் நீண்ட நாள் போராட்டம் நடத்தினர். விவசாயிகளை அரசு கண்டுக்கொள்வது கிடையாது, பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒரு நிலைபாடும், பிற மாநிலங்களில் மற்றொரு நிலைபாடும் பாரதீய ஜனதா அரசு கொண்டிருப்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.

விவசாயிகள் கடன் தள்ளுபடி என்பதில் நேர்மறையாக ஸ்திரமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

 இதற்கிடையே உத்தரபிரதேசம் மற்றும் மராட்டியத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் பயனுள்ளதாக அமையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

நாடு முழுவதும் விசாயிகள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பொது பட்ஜெட் மீது விவசாயிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விவசாய விளைப்பொருட்களுக்கு நியமான விலை உள்ளிட்ட கோரிக்கையானது விவசாயிகள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு விவசாயிகளை கண்டுக்கொள்வது கிடையாது, தொழில் நிறுவனங்கள் பற்றியே கவலைக் கொண்டு உள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர். எனவே மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையானது விவசாயிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

பொருளாதார வல்லூநர்கள் பொது பட்ஜெட்டில் கிராமபுற பொருளாதாரம் மற்றும் விவசாயத் துறைக்கு முக்கிய அம்சங்கள் காணப்படும் என தெரிவிக்கப்பட்டும் வருகிறது.

நம்பிக்கையின்மை

பொருளாதார வல்லூநர்கள் தரப்பில் விவசாயத் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் சாதகமான சலுகைகள் இடம்பெறும் என்று கணிக்கப்பட்டாலும் விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையில்லாத நிலையும் காணப்படுகிறது. விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்தியும், தற்கொலைக்கு மத்தியிலும் எங்களுக்கு சாதகமாக எந்தஒரு நகர்வும் காணப்படவில்லை. இப்போதா கிடைக்கப்போகிறது என்ற சலிப்பும் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

மராட்டிய மாநில பருத்தி விவசாயிகள் குறைந்த பட்ச விலையில் உயர்வு காணப்படும், அதற்கு ஏற்றவகையில் பட்ஜெட் இருக்கும் என அவர்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

மராட்டிய மாநில விதார்பா பிராந்தியத்தை சேர்ந்த விவசாயி விஜய் கோபால் பேசுகையில், “எங்களுக்கு அரசின் மீது எந்தஒரு நம்பிக்கையும் கிடையாது,” என்றார். 

பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு அதிகமாக பேசுகிறதே தவிர செயலில் ஒன்றும் தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டிஉள்ளார். இதுபோன்ற கதையே பெருவாரியான விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மழையின்மை மற்றும் பல்வேறு இயற்கை சீற்றங்களை எதிர்க்கொண்டு விளைவிக்கப்படும் பொருட்களுக்கு சரியான விலைகிடைப்பது கிடையாது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. இவையெல்லாம் களையும் வகையில் பட்ஜெட் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சலுகைகளை எதிர்பார்க்கிறோம்

விவசாயிகள் பேசுகையில், “விதைப்பொருட்கள் வாங்க மானியம் எதிர்பார்க்கிறோம், நீர்பாசானத்திற்கு உதவி மற்றும் நியாமான விலையில் உரம் ஆகியவற்றிற்கு வழிவகை செய்யப்படும் வகையில் பட்ஜெட் அமையும் என நம்புகிறோம். நாங்கள் இடைத்தரகர்களால் கொள்ளையடிக்கப்படுகிறோம். இதனை களைவதற்கு மத்திய அரசின் சார்பில் ஸ்திரமான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். விவசாயம் செய்வது நாங்கள், விளைப்பொருட்களுக்கு அதிமான விலையை வைத்து எங்களைவிட பணம்தான் சம்பாதிக்கிறார்கள்,” என்கிறார்கள் .

விலைப்பொருட்களுக்கு நியாயமான விலை மற்றும் இடைத்தரகர்கள் கொள்ளையை தடுக்கவும் அரசின் நடவடிக்கை இருக்கும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். 

Next Story