பட்ஜெட் 2021- சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
வரும் பிப்.1 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021- ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வருமான இழப்பு என பல்வேறு பிரச்சினைகள் சந்தித்துள்ள சாமானிய மக்கள் பட்ஜெட்டில் தங்களுக்கு ஏதேனும் சலுகைகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அவர்களின் முக்கியமான சில எதிர்பார்ப்புகளை கீழ் காணலாம்
*வரி சேமிப்பு முதலீடு ஆண்டு இலக்கு 1.5 லட்சமாக உள்ளதை 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
*கொரோனா மருத்துவ செலவுகளுக்கான வரி சலுகை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது
* வருமான வரி உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது ஆண்டுக்கு 2.5 லட்சம் வரை உள்ளதை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
* வீட்டில் இருந்தே வேலை செய்தவர்கள் பெற்ற படித்தொகைக்கு விலக்கு தேவை என எதிர்பார்ப்பு நிலவுகிறது
* மூத்த குடிமக்களுக்கான வட்டி வருமானத்தின் விலக்கு வரம்பு அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது
Related Tags :
Next Story