என் மீது புகார், பிரபலமாகி விட்டார் ஒருவர் மகிழ்ச்சி! -நடிகர் பார்த்திபன் டுவீட்


என் மீது புகார், பிரபலமாகி விட்டார் ஒருவர் மகிழ்ச்சி! -நடிகர் பார்த்திபன் டுவீட்
x

என் மீது புகார் செய்ய, அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர், மகிழ்ச்சி என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

சென்னை,

நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கி, மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக ஜெயங்கொண்டான் எனபவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக பார்த்திபன் வீட்டில் பணிபுரிந்த ஜெயங்கொண்டான், நடிகர் பார்த்திபன் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

பார்த்திபனின் திருவான்மியூர் வீட்டில் கொள்ளை போனதை அடுத்து ஜெயங்கொண்டான் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்து கேட்க சென்றபோது பார்த்திபன் தன்னை தாக்கியதாக  ஜெயங்கொண்டான் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

'பார்த்திபன் கொலை செய்ய முயற்சி' Humour sense-க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது! என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர்  அலுவலகத்தில் நின்ற குற்றவாளி, இன்று காலை அதே அலுவலகத்தில் என் மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர். மகிழ்ச்சி! என்று கூறியுள்ளார்.

Next Story