ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது, அதிகாரத்தை கைப்பற்றாமல் அதை மாற்ற முடியாது -கமல்ஹாசன்
மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. அதிகாரத்தை கைப்பற்றாமல் ஊழல் முறையை மாற்ற முடியாது என கமல்ஹாசன் கூறி உள்ளார்.
சென்னை
அல்ஜீப்ரா - தி ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ் கிளப் ஏற்பாடு செய்து இருந்த ஒரு நிகழ்ச்சியில் தி இந்து குழும வெளியீடுகளின் தலைவர் என்.ராமிற்கு பேட்டி அளித்த நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது;-
ரஜினிகாந்த் இப்போது பெருமை மிக்க ஒரு தமிழர். அவர் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதைத்தான் நான் அவரைச் செய்ய வைக்க முயற்சிக்கிறேன்.
ஹே ராம் படம் எடுத்தபோதே நான் கிட்டத்தட்ட அரசியலில் இறங்கிவிட்டேன். இன்றுள்ள அரசியல் சூழ்நிலையை நாடு அடைவது குறித்து அந்த நேரத்தில் கண்ட அறிகுறிகள் அந்த திரைப்படத்தை உருவாக்கத் தூண்டின. இன்று அந்த படம் தயாரிப்பது கடினமாக இருக்கும்.
பிளவுபடுத்தும் அரசியலின் தற்போதைய கட்டத்திற்கு நாடு எவ்வாறு சென்றது? ஜனநாயகம் தவறானது அல்ல, அதை ஆரோக்கியமாக வைத்திருக்க நிலையான விழிப்புணர்வு தேவை.
தமிழ்நாட்டில் திராவிட அரசியலின் ஆதிக்கம் காலத்தின் தேவை என்பதால் வெளிப்பட்டது. ஆனால் அது பின்னர் அவர்களின் [சில கட்சிகளின்] தேவையாக மாறியது.
திராவிட அரசியல் தான் தமிழ்நாட்டின் முக்கிய இடம், அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதை சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. அதிகாரத்தை கைப்பற்றாமல் ஊழல் முறையை மாற்ற முடியாது என அவர் கூறினார்.
Related Tags :
Next Story