அமிதாப்பச்சனுக்கு கொரோனா: ரஜினிகாந்த் நலம் விசாரிப்பு - விரைவில் மீண்டும் வர வேண்டும் டுவீட் செய்த கமல்ஹாசன்


அமிதாப்பச்சனுக்கு கொரோனா: ரஜினிகாந்த் நலம் விசாரிப்பு - விரைவில் மீண்டும் வர வேண்டும் டுவீட் செய்த கமல்ஹாசன்
x
தினத்தந்தி 12 July 2020 12:59 PM IST (Updated: 12 July 2020 12:59 PM IST)
t-max-icont-min-icon

அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.

மும்பை,

கொரோனா தொற்று காரணமாக அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை மும்பை நானாவதி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. அவரது உடல் நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.  இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று  மராட்டிய  சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ரஜினி காந்தத் அமிதாப்பச்சனை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். மேலும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமிதாப் பச்சனுக்கு மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா உறுதியானது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பதிவில்,

அமிதாப் பச்சனும் அவரது மகனான அபிஷேக் பச்சனும் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும். நான் இந்திய மருத்துவர்களை நம்புகிறேன். இருவரும் உடல் நல பிரச்சினைகளை கடந்து விடுவார்கள். அவர்கள் மீண்டும் நல்ல உடல் நிலையுடன் தேறி வலம் வலம் வந்து சாதனையாளர்கள் என நிரூபிப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.

Next Story