வட இந்தியக் கலையுலகம் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை வைரமுத்து டுவீட்


வட இந்தியக் கலையுலகம் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை வைரமுத்து டுவீட்
x
தினத்தந்தி 26 July 2020 12:29 PM IST (Updated: 26 July 2020 12:29 PM IST)
t-max-icont-min-icon

இந்தி திரையுலகில் தனக்கு எதிராக சதி நடப்பதாக ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்ட நிலையில், அன்பு ரகுமான் அஞ்ச வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தி பட உலகில் தன்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் சதி செய்வதாக, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகில் தனக்கு எதிராக சதி நடப்பதாக ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்ட நிலையில், அன்பு ரகுமான் அஞ்ச வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை என டுவிட்டர் பதிவில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இரண்டுக்கும் உயிர்வாழும், எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான் எனவும் வைரமுத்து தெரிவித்துள்ளார். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை என ஏ.ஆர்.ரகுமானுக்கு அவர் ஆதரவாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story