பிரபல பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா தொற்று உறுதி
பிரபல பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகியோருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவர்களுக்கு தொற்று பாதிப்பு தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நடிகைகள் கடந்த சில வாரங்களாக நிறைய பார்ட்டிகளில் கலந்து கொண்டனர் என்றும் சரியான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கரீனா மற்றும் அம்ரிதாவுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்களை ஆர்டிபிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல், ஊர்மிளா மடோன்கர், மலைக்கா அரோரா, அக்ஷய் குமார், அமித் சாத், கோவிந்தா போன்ற பல பாலிவுட் பிரபலங்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story