கத்ரீனா கைப்: திருமண பரிசாக கோடிகளில் பரிசளித்த சல்மான், ரன்பீர் ?


கத்ரீனா கைப்: திருமண பரிசாக கோடிகளில் பரிசளித்த சல்மான், ரன்பீர் ?
x
தினத்தந்தி 16 Dec 2021 9:27 PM IST (Updated: 16 Dec 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

பல பாலிவுட் நட்சத்திரங்கள் இவர்களுக்கு பல கோடி மதிப்புள்ள பரிசுகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை,

பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் - விக்கி கவுசல் திருமணம்  கடந்த 9 ஆம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்தது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த கத்ரினா கைப் - விக்கி கவுசல்  ஜோடி ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்காக மணமக்கள் தங்கிய சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை ரூ.8 லட்சம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.கத்ரீனாவும் விக்கியும் தங்கள் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோவுக்கு ரூ.80 கோடிக்கு விற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது இவர்களது திருமணத்திற்கு பரிசாக வந்த பொருட்கள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதில் பிரபல பாலிவுட் நடிகரும், கத்ரீனா கைப் உடன் பல வெற்றி படங்களில் இணைந்து நடித்த சல்மான் கான், கவுசல் -கத்ரீனா ஜோடியின் திருமண பரிசாக 3 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரை பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கத்ரீனா கைப் அவர்களின் நெருங்கிய நண்பரும் பாலிவுட் உலகின் முன்னணி கதநாயகனுமான ரன்பீர் கபூர் , இவர்களது திருமண பரிசாக 2.5 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸை பரிசளித்துள்ளார்.மேலும் பல பாலிவுட் நட்சத்திரங்கள் இவர்களுக்கு பல கோடி மதிப்புள்ள பரிசுகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story