அரை நூற்றாண்டாக தேனிசைக் குரலால் ரசிகர்களை மகிழ்வித்தவர்; லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை பயணம்...!
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற வளையோசை கல கல வெனெ என்ற பாடல் மூலம் தமிழ் இசையுலகில் புகழ்பெற்றார்.
மும்பை,
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சுமார் ஒருமாதமாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானது. இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானர்.
லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை பயணம்
இந்தியாவின் ‘இசைக் குயில்’ என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் அவர்கள், 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் நாள் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள “இந்தூர்” என்ற இடத்தில் பிறந்தார்.
லதா மங்கேஷ்கரின் தந்தை ஒரு கிளாசிக்கல் பாடகர் மற்றம் நாடக கலைஞராகவும் இருந்தார். இதனால் தன்னுடைய ஐந்து வயதிலேயே தந்தையிடம் இசைப் பயிலத் தொடங்கினார். பிறகு, புகழ் பெற்ற அமான் அலி கான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோரின் கீழ் இசைப்பயிற்சி மேற்கொண்டார்.
இசைப் பயணம்
தனது 13-வயதில் இசைப்பயணத்தை தொடங்கிய லதா மங்கேஷ்கர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி படத்தில் பாடலைப் பாடினார். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது. 1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.
விருதுகளும் அங்கீகாரங்களும்
1969 ஆம் ஆண்டு “பத்ம பூஷன் விருது” வழங்கப்பட்டது.
1972 ஆம் ஆண்டு பீட்டி நா பிடாய் ரெய்னா (பரிஜாய்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக பாடல்களை பாடியதற்காக “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார்.
1975 ஆம் ஆண்டு ரூதே ரூதே பியா (கோரா காகஸ்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டு “தாதா சாஹேப் பால்கே விருது” வழங்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு யாரா சீலி சீலி (லேகின்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
1993 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது.
1996 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது.
1997 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது.
1999 ஆம் ஆண்டு “பத்ம விபூஷன் விருது” வழங்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினிமா விருது.
2001 ஆம் ஆண்டு “நூர்ஜஹான் விருது” வழங்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு “மகாராஷ்டிரா ரத்னா விருது” வழங்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு “பாரத் ரத்னா விருது” வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story