காதலர் தினத்தில் கணவரை பிரியும் கவர்ச்சி நடிகை...!


காதலர் தினத்தில் கணவரை பிரியும் கவர்ச்சி நடிகை...!
x
தினத்தந்தி 14 Feb 2022 1:50 PM IST (Updated: 14 Feb 2022 1:58 PM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தில் கணவரை பிரிந்து உள்ளேன் என்று பிரபல கவர்ச்சி நடிகையை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

மும்பை

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு பிரபலமானவர். 

ராக்கி சாவந்த் தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு திருமணம் ஆகிவிட்டது. அதை உறுதி செய்கிறேன். எனது கணவர் பெயர் ரிதேஷ். தொழிலதிபரான அவர், லண்டனில் வசிக்கிறார். திருமணம் முடிந்ததும் லண்டன் சென்றுவிட்டார். அற்புதமான கணவர் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி” என்று கூறி இருந்தார்.

இந்தி ‘பிக்பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்ற ராக்கி சாவந்த் அதில் கணவர் ரிதேஷையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். ரிதேஷ், ஏற்கனவே திருமணம் ஆனவர். ரிதேஷ் மீது அவரது முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.

இந்த நிலையில், இப்போது தனது கணவர் ரிதேஷை பிரிந்து விட்டதாக ராக்கி தெரிவித்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் ராக்கி சாவந்த் வெளியிட்டுள்ள பதிவில், ’‘எங்களை மீறி பல சம்பவங்கள் நடந்து விட்டன. இருவரும் கருத்து வேறுபாடுகளை தீர்த்து கொள்ள முயற்சிகள் செய்தும் முடியவில்லை. இதனால் கணவரை பிரிய முடிவு செய்தேன். காதலர் தினத்தில் இப்படியொரு முடிவு எடுத்தது வருத்தமாகத்தான் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story