காதலர் தினத்தில் இளையராஜாவின் 1422-வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது
இசைஞானி இளையராஜாவின் இசை பல தலைமுறைகளையும் தாண்டி இன்றுவரையிலும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது
சென்னை
இசைஞானி இளையராஜாவின் இசை பல தலைமுறைகளையும் தாண்டி இன்றுவரையிலும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 1400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இந்நிலையில், காதலர் தினமான,நேற்று இவருடைய 1422-வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
அதில் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1422-வது படத்துக்கு ’எ பியூட்டி புல் பிரேக்கப்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, கன்னட இயக்குநர் அஜித் வாசன் உஜ்ஜினா இயக்குகிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹவுஸ் 5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
லண்டனில் இருந்து இந்தியா வரும் காதலர்கள், இங்கு சில நாட்கள் வாழ்ந்தப்பிறகு, பிரிந்துவிட நினைக்கின்றனர். அவர்கள் மீண்டும் இணைந்தார்களா, இல்லையா...? என்பதை,காதல், திகில் கலந்து சொல்கிறது இந்த படத்தின் கதை. இந்த படத்தில் கிரிஷ் கதாநாயகனாகவும், மாட்டில்டா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வருகிற மே மாதம் வெளியாகிறது.
Related Tags :
Next Story