மீண்டும் இணைந்த இசை சகோதரர்கள் இளையராஜா - கங்கை அமரன்..!

இசையமைப்பாளர் இளையராஜாவும் கங்கை அமரனும் மீண்டும் இணைந்தனர்.
சென்னை,
பிரபல இசையமைப்பாளர்களும் சகோதரர்களுமான இளையராஜாவும் கங்கை அமரனும் பல்வேறு திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பேசாமல் இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இளையராஜாவும், கங்கை அமரனும் சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் வெங்கட்பிரபு, 'பாவலர் சகோதரர்கள் மீண்டும் இணைந்தனர்' என்று குறிப்பிட்டுள்ளார். இது இருவரின் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pavalar brothers reunion!! @ilaiyaraaja@gangaiamaren 🙏🏽🙏🏽🙏🏽 pic.twitter.com/9MABjbLTZp
— venkat prabhu (@vp_offl) February 16, 2022
Related Tags :
Next Story