நடிகர் ரஜினிகாந்தின் 170வது பட தயாரிப்பில் போனிகபூர்...?


நடிகர் ரஜினிகாந்தின் 170வது பட தயாரிப்பில் போனிகபூர்...?
x
தினத்தந்தி 20 Feb 2022 9:23 PM IST (Updated: 20 Feb 2022 9:23 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்தின் 170வது பட தயாரிப்பில் ஈடுபடுவது பற்றி போனிகபூர் பதில் அளித்து உள்ளார்.


புதுடெல்லி,



நடிகர் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான குடும்பப்பாங்கான, ஆக்சன் நிறைந்த படம் அண்ணாத்த.  சிவா இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு பின்பு, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பதற்கு அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.  இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்க இருக்கிறார் என சில தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தன.  எனினும், இது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.  நடிகர் அஜித் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்துள்ள போனி கபூர், இதுபற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

இந்த தகவலை மறுத்து கபூர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக எனக்கு நண்பர்.  நாங்கள் அவ்வப்போது சந்தித்து, விசயங்களை பரிமாறி கொள்வது வழக்கம்.

நாங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு படம் பண்ணுவது பற்றி முடிவு செய்யப்பட்டால், அதுபற்றிய முதல் அறிவிப்பு வெளியிடும் நபராக நானே இருப்பேன்.  அதனால், இதுபோன்று கசிய கூடிய வதந்திகளை நீங்கள் நம்பவேண்டியதில்லை என்று தெரிவித்து உள்ளார்.


Next Story