அஜித்குமாரின் 62-வது திரைப்படம்- நாளை அதிகாரப்பூர்வ தகவல்?
அஜித்குமார் நடிக்கும் 62-வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.
இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனா இருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இவர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது அஜித்குமார் அவர்களின் 62 -வது படம் குறித்த தகவல் நேற்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கவுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவியது. இந்த நிலையில் தற்போது அஜித்குமார் நடிக்கும் 62 வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story