நடிகர் சங்க தேர்தல்: விஷால், நாசர் அணியினர் முன்னிலை எனத்தகவல்


File Photo
x
File Photo
தினத்தந்தி 20 March 2022 3:19 PM IST (Updated: 20 March 2022 3:19 PM IST)
t-max-icont-min-icon

முதலிரண்டு சுற்று முடிவில் நாசர் தலைமையிலான அணி முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், முதலிரண்டு சுற்று முடிவில் நாசர் தலைமையிலான அணி முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர், பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தி, கருணாஸ் ஆகியோர் முன்னிலை வகித்து வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன

நடிகர் சங்க தேர்தலில்  கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர். 

Next Story