பிரிய மனம் இல்லாமல் 16 கி.மீ. தூரம் நாயை தோளில் சுமந்து சென்ற பெண்- பாராட்டிய பாலிவுட் நடிகை..!
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நாயை பிரிந்து செல்ல மனம் இல்லாமல் தனது தோளிலே 16 கி.மீ. தூரம் சுமந்து சென்றுள்ளார்.
மும்பை,
உக்ரைன் மீது ரஷியா 26-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தீவிரம் அடைந்து வருவதால், உக்ரைன்யில் இருந்து இதுவரை பல்லாயிரக் கணக்கானோர் இடம்பெயர்ந்து உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது செல்ல நாயை விட்டுச் பிரிந்து செல்ல மனம் இல்லாமல் தனது தோளிலே சுமந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளார்.
அலிசா என்ற அந்த பெண் உக்ரைன் எல்லையை விட்டு வெளியேறும் வரை 16 கிலோமீட்டர் தூரம் தனது நாயை தூக்கிக்கொண்டு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் சமீபத்தில் வைரலானது.
இதையடுத்து அவரது இரக்கத்தையும் அர்ப்பணிப்பையும் கண்டு பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டினர். இந்த நிலையில் தற்போது அலிசாவை , பாலிவுட் உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஆதியா ஷெட்டி பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அலிசா தனது நாயை தூக்கிக்கொண்டு செல்லும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story